search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெவின் பீட்டர்சன்"

    இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சன் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி குறித்து கணித்துள்ளார்.
    லண்டன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா - வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    முதல் முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்து அணியா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சன் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி குறித்து கணித்துள்ளார்.

    அவர் கூறுகையில், ஏற்கெனவே 2015-ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளே மோதின. அதில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. தற்போதும் அந்த இரு அணிகளே டி20 இறுதிப்போட்டியிலும் மோத உள்ளன. இன்று நடக்கும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியா 2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது இருந்தது. இப்போது கோப்பையை வெல்ல இரண்டாவது வாய்ப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார். #SLvENG
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 4-1 என கைப்பற்றியது. அக்டோபர்- நவம்பர் மாதத்தில் இங்கிலாந்து அணி இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    அலஸ்டைர் குக் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை தேட வேண்டியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை இல்லாமல் திணறி வந்தது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜென்னிங்ஸ், ஆசிய கண்டத்தில் சரியாக விளையாடாத பிராட் ஆகியோரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘433 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் 32 வயதான ஸ்டூவர்ட் பிராட், சொந்த மண்ணை விட்டு வெளியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியது கிடையாது.



    கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. அவரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கினால், நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்.

    இந்தியாவிற்கு எதிராக 9 இன்னிங்சில் ஜென்னிங்ஸ் 163 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரை நீக்க வேண்டும். ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரை தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறக்க வேண்டும்’’ என்றார்.
    பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் முதன்முறையான வெளிநாட்டு வீரரான பீட்டர்சன் பட்டோடி நினைவு பேருரையை நிகழ்த்தினார். #BCCIAward
    கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் பிசிசிஐ விருதுகள் வழங்கி கவுரவிக்கும். இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.

    இந்த விழாவின்போது எம்ஏகே பட்டோடி நினைவு பேருரை நிகழ்த்தப்படும். கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்தான் பேருரை நிகழ்த்தினார். இந்த முறை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் பேரை நிகழ்த்தினார்.



    இதன்மூலம் பட்டோடி நினைவு பேருரையை நிழ்த்திய வெளிநாட்டு நபர் என்ற பெருமையை பீட்டர்சன் பெற்றுள்ளார். பீட்டர்சன் உரை நிகழ்த்துவார் என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பெரும்பாலானா பிசிசிஐ அதிகார்கள் அதிப்தி தெரிவித்திருந்தனர். என்றாலும், பட்டோடி நினைவு பேருரையை நிகழ்த்தியது எனக்கு பெருமை என்று பீட்டர்சன் கூறினார்.
    ×